கொரோனா ஊரடங்கு எதிரொலி!: புதுவையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் வடமாநிலத்தவர்கள்..நிரம்பி வழியும் ரயில் பெட்டி..!!

புதுச்சேரி:  புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் கொல்கத்தா செல்லும் ஹவுரா விரைவு ரயில், நிரம்பி வழிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதன்படி அத்யாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகின்ற மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பை இழந்த வடஇந்திய தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் புறப்பட்டனர். 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் மூடப்பட்டதால் அங்கு பயிலும் வடஇந்திய மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் புதுச்சேரியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஹவுரா விரைவு ரயிலில் 22 பெட்டிகளும் நிரம்பி வழிந்தன.. ஊரடங்கு முடிந்த உடன் மீண்டும் புதுச்சேரி வருவோம் என்றும் ஊருக்கு செல்வது கஷ்டமாக இருப்பதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் உணவு, வேலை இல்லாமல் சொந்த ஊர் திரும்புவதாக வடமாநிலத்தவர்கள் வேதனை தெரிவித்தனர். 

Related Stories: