×

உ.பி.யில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது!: ப.சிதம்பரம்

டெல்லி: உத்திரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசம் இந்த 2வது அலையில் அதிக தொற்று பாதிப்புகளையும், அதிக உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், உத்திரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது துளியும் இல்லை என்றும், மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்திருந்தார். 


மேலும் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக கூறுகின்றன; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யோகி குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதும் அருவருப்பை தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தொலைக்காட்சிகள் போலியான காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 


நாளிதழ்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றனவா? அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கின்றனரா? எனவும் ப.சிதம்பரம் வினவியுள்ளார். தொடர்ந்து, இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இதுகுறித்து வெளியான வீடியோக்கள், படங்கள் போலியானதா? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார். 



Tags : Yogi Adityanath ,UP ,P. Chidambaram , UP, Corona Vaccine, Shortage, Yogi, P. Chidambaram
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...