×

லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப் பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை!: ஐகோர்ட்டில் இயக்குநர் ஷங்கர் பதில்..!!

சென்னை: இந்தியன் -2 படம் தொடர்பாக லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் சங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கிறது. லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப் பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்திருக்கிறார். இரு தரப்பும் பேச்சு நடத்தி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை என்று ஷங்கர் விளக்கமளித்திருக்கிறார். தங்கள் நிறுவனத்திற்கு இந்தியன் 2 படத்தை தயாரித்து கொடுக்காமல் பிற படங்களை தயாரிப்பதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில், ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தனக்கு தேதிகள் வெற்றிடமாக இருப்பதாகவும் அந்த காலகட்டத்தில் முடித்து கொடுப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் சமரசமாக பேச்சு நடத்தி தீர்வுகாண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இருதரப்புக்கும் இடையே இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 


இந்த பேச்சுக்கு பிறகும் எந்த தீர்வும் எட்டப்படாததால் லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப் பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை. இதனால் லைகா நிறுவனத்துடனான பிரச்சனைக்கு நீதிமன்றமே தீர்வு காண வேண்டும் என்று ஷங்கர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 



Tags : Lyika ,Shankar ,Icorde , Leica Company, Indian-2, iCourt, Director Shankar
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...