×

கொரோனாவை பரப்பியதில் பிரதமர் மோடி ஒரு ‘சூப்பர் ஸ்பிரட்டர்’ : ஐஎம்ஏ துணை தலைவர் ஆவேசம்

புதுடெல்லி: கொரோனா தொற்றை பரப்புவதில் பிரதமர் மோடி ஒரு ‘சூப்பர் ஸ்பிரட்டர்’ ஆக செயல்பட்டுள்ளார் என்று ஐஎம்ஏ துணை தலைவர் ஆவேசமாக கூறினார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மோசமாகி வரும்நிலையில், நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை இவ்வளவு தீவிரமடைய பிரதமர் மோடிதான் காரணம் என இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜாத் தஹியா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மத்தியில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தினார். கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது மக்களுக்கு புரியவைக்க மருத்துவ ஊழியர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று எல்லா திசையிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிகிறது. கொரோனா நெருக்கடியை மீறி கும்பமேளாவும், தேர்தல் கூட்டங்களும் தொடர்ந்தன. மிகப்பெரிய தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தி கொரோனா பரவுவதற்கு பிரதமர் மோடி காரணமாகிவிட்டார். அவர், ‘சூப்பர் ஸ்பிரட்டர்’ ஆக இருந்துள்ளார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளும், ஆம்புலன்ஸ் கூட்டங்களும் வெளிப்படையாக தெரிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,IMA ,president , பிரதமர் மோடி
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்