கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் : மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை, மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பமுள்ள தகுதியுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வரும் 29, 30ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மருத்துவ அலுவலர்களுக்கான 150 காலி பணியிடங்கள் நிரப்படுகின்றன. குறைந்தபட்ச கல்வித்தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம். செவிலியர் பணியிடம் 150. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்து நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்த டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம். இத்தகைய தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேர சுயவிருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். மேலும் நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி, உறுப்பினர் செயலர், மாநகர நல அலுவலர், சென்னை மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்னை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>