சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னையில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் மருத்துவமனைகள் தவிர்த்து ஏராளமான கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் கொரோனா மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையிலும் தொற்று அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தனியாரும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம்  என கூறினார்.  சென்னையில் தனியார் ஓட்டல்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  என தெரிவித்தார். கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிக்கு இ-மெயில் மட்டும் அனுப்பினால் போதுமானது என கூறினார்.

Related Stories:

>