மும்பை மாநிலம் மராட்டியத்தில் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழந்ததாக நிர்வாகம் தகவல்

மும்பை: மும்பை மாநிலம் மராட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக நோயாளிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியம் மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.  அதிகாலை 03.30-மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு மீட்பு வாகனம் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

தீ விபத்து காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் போது 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   

Related Stories:

>