நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க 5 மருத்துவமனைகளில் சிறப்பு மையம் அமைப்பு: மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால், மக்கள் அச்சத்துடன், அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், படுக்கைகள் எண்ணிக்கை வேகமாக நிரம்புகிறது. இதனால், அதிக தொற்றுடன் உள்ள நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உருவாகிறது.

இதனை கட்டுப்படுத்த, சென்னையில் உள்ள ஐந்து பிரதான அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை பிரித்து, லேசான அறிகுறி உள்ளவர்களை, துணை மருத்துவமனைகளிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் அனுமதிக்க வழிகாட்டப்படுகிறது. இதற்காக, 10 டாக்டர்கள், 10 பாரா மெடிக்கல் டாக்டர்கள் என ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மையம், ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு குறைந்து விரைவான சிகிச்சை வழங்கப்படும்.

Related Stories:

>