ட்வீட் கார்னர்... நன்றியுடன் நடராஜன்

இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு முழங்கால் மூட்டு காயத்துக்காக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட இந்த காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நடராஜன், நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2 லீக் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில்... இதற்கு ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரியம், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>