×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கியூவில் நின்றபோது மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்த கொரோனா நோயாளி: கையெடுத்து கும்பிட்டு கதறிய மனைவி

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கொரோனா நோயாளி ஒருவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டுகொள்ளாததால் மயங்கி விழுந்தார். அவரது மனைவி அங்கிருந்தவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் (புறநோயாளிகள் பிரிவு) இயங்கி வருகிறது. ஒரு மருத்துவர், 2 செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் பணியாற்றுகின்றனர்.  

தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து தினமும் 400 பேர் முதல் 500 பேர் வரை கொரோனா பரிசோதனைக்காக இங்கு வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கான படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதல் படுக்கை வசதி, கூடுதலாக புறநோயாளிகள் பிரிவு திறக்க பொதுமக்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு காரிமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 35 வயது கொரோனா பாதித்த இளைஞர், மனைவியுடன் சிகிச்சைக்கு வந்தார். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கியூவில் நின்றிருந்தவர்களிடம் அவர் மிகவும் அவதிப்படுவதாக அங்கிருந்தவர்களிடம் மனைவி கூறினார்.

ஆனால் யாரும் வழிவிடவில்லை. மேலும், மருத்துவர்கள், நர்ஸ்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி கணவனை கைத்தாங்கலாக அப்பெண் பிடித்தபடி வரிசையில் சென்றார். அப்போது அந்த இளைஞர் திடீரென மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை காப்பாற்றும்படி அப்பெண் நர்ஸ்களிடம் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார். அதன்பின் டாக்டருடன் நர்ஸ்கள் வந்து இளைஞரை மரத்தடியில் அமரவைத்து ஆக்சிஜன் வழங்கினர். பின்னர் இளைஞரை ஊழியர்கள் கொரோனா வார்டில் சேர்த்தனர்.


Tags : Grotto Government Hospital ,Quee: Grenades ,Kāratu , Corona patient faints while queuing at Dharmapuri Government Hospital: Wife shakes hands
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனையில்...