முதுகெலும்பு வளைவு நோய்க்கு நவீன அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த டேனியல் ப்ரை (42) என்ற பெண், கடந்த 30 வருடங்களாக முதுகெலும்பு அசாதாரணமாக வளையக்கூடிய ‘இடியோபாடிக் ஸ்கோலியோசி’ நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால், அவரால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இது விலா எலும்பு பகுதி, தண்டு மற்றும் தோள்களில் சிதைவை ஏற்படுத்தும், அத்துடன்  கடுமையான இதய, நுரையீரல் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இந்நிலையில், அப்போலோ முதுகெலும்பு சிகிசை பிரிவில் இதற்கு சிகிச்சை பெற இவர் சென்னைக்கு வந்தார். இவருக்கு, உலோக இணைப்பு இல்லாத முதுகெலும்பு வளைவுத் திருத்த அறுவை சிகிச்சையை ‘ஸ்கோலியோசிஸ்’ டாக்டர் சஜன் கே ஹெக்டே மற்றும் அவரது குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் சஜன் கே ஹெக்டே கூறுகையில், “உலோக இணைப்பு இல்லாத முதுகெலும்பு வளைவுத் திருத்த அறுவை சிகிச்சை குறைந்த நேரத்தில், குறைந்த ஊடுருவல் முறையில், குறைந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இது நோயாளிகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் பிற்காலத்தில் முதுகுவலி வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. இந்த நுட்பத்தை இப்போது இடியோபதிக் ஸ்கோலியோசிஸிலும் பயன்படுத்தலாம். இந்த நோயாளிகள் முழு இயல்பு நிலைக்கு விரைவாக திரும்பி, குணமடைய முடியும். தற்போது, இந்த அமெரிக்க பெண் பிசியோதெரபி சிகிச்சைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளார். அவரது முதுகு தோற்ற நிலை, அவரது விலா எலும்பு, தண்டு பகுதி மற்றும் தோள்கள் சீரான நிலைக்கு திரும்பி மேம்பட்டு வருகிறது. அவர் சாதாரண அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு திரும்பியுள்ளதுடன் இந்த வாரம் அமெரிக்காவிற்கு திரும்பவுள்ளார்,” என்றார்.

Related Stories:

>