கணவன் இறந்த 24 மணி நேரத்தில் மனைவி சாவு: கொடுங்கையூரில் சோகம்

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3வது பிளாக்கை சேர்ந்தவர் மகாமணி (66). சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு பாப்பாத்தி (55) என்ற மனைவியும் ரவி, ரதி, தீபா என்ற 3 பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னை வால்டாக்ஸ் சாலை வழியாக மகாமணி செல்லும் போது, சரக்கு வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டு, மாதவரம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு வந்திருந்த அவரது மனைவி பாப்பாத்தி, கணவர் மகாமணி உடலை மூடும்போது, அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார். கணவன் இறந்த 24 மணி நேரத்தில் துக்கம் தாங்க முடியாமல் மனைவியும் இறந்த சம்பவம் கொடுங்கையூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>