டெல்லியில் அடுத்த மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்!: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

டெல்லி: டெல்லியில் அடுத்த மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவலின் 2ம் அலை அதிதீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் அடுத்த மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தவுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை சிறிது குறைந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

இதில் 18 ஆலைகள் தாய்லாந்தில் இருந்தும் 21 ஆலைகள் பிரான்சில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மத்திய அரசு வருகின்ற 30ம் தேதிக்குள் 8 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், பாங்காங்கில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வர மத்திய அரசு விமானப்படை விமானங்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories: