×

சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை....விரைவில் முடிவடையும், காலநீட்டிப்பு தேவையில்லை: நீதிபதி கலையரசன் விளக்கம்

சென்னை: சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை விரைவில் முடிவடையும், காலநீட்டிப்பு தேவையில்லை என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று விசாரணை பணிகளை முடிக்க ஆணையத்துக்கு கூடுதலாக 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் புகார் அளித்தவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் விசாரணை குழுவில் பணியாற்றும் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விசாரணைப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் திட்டமிட்ட காலத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையம் சார்பில் தெரிவித்து இருந்த நிலையில், நீதிபதி கலையரசன் விளக்கம் அளித்துள்ளார். விசாரணை விரைவில் முடிவடையும், காலநீட்டிப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார். சூரப்பா விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படும். விரைவில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் விசாரணை ஆணையத்தின் அவகாசம் மே இறுதி வரை உள்ளதால் கால நீட்டிப்பு தேவையில்லை என நீதியரசர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Suruba , Surappa, trial, extension, not required, Kalaiyarasan
× RELATED அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா...