புதுவை மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி!: கடலூர் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம்..மதுக்களை வாங்கி குவிக்கும் மதுபிரியர்கள்..!!

கடலூர்: புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கக்கூடிய நிலையில் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. தினமும் நோயாளிகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் வேளையில், அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டு நேற்று முதல் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. 

இதனால் கடலூர் மாவட்டத்தில் மதுபான விற்பனை என்பது அதிகரித்திருக்கிறது. புதுவை மது குடிப்போர் மது வாங்க கடலூருக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருக்கின்றனர். சுமார் 500 மீட்டர் தூரம் தடுப்புக்கட்டை அமைத்து நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். சமூக இடைவெளியை துளியும் கண்டுகொள்ளாமல் மதுபிரியர்கள் மதுக்களை வாங்கி செல்கின்றனர். 

கடலூர் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் புதுச்சேரிக்கு மது வாங்க செல்கின்றனர். தற்போது அவர்களும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக நின்று மதுவை வாங்கி செல்வதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுவையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் மதுக்கடை மூடப்படுமோ என்ற அச்சத்தில் கூட்டம் குவிந்து வருகிறது. 

Related Stories:

>