இதயத்தை நொறுக்குகிறது இந்தியா சந்திக்கும் பாதிப்புகள்!: கொரோனா சூழல் குறித்து WHO தலைவர் கவலை..!!

ஜெனிவா: இந்தியா சந்தித்து வரும் கொரோனா பாதிப்புகள் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. சீனாவின் ஹூவேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகை ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததாக நினைத்த நிலையில், 2ம் அலை மெல்ல ஆரம்பித்து தற்போது அசுர வேகத்தில் வீசி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு சற்று குறைந்து வரும் அதேநேரம், இந்தியாவில் நிலைமை மோசமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். சுஸர்லாந்தில் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனம், இந்தியாவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார். 2600 நிபுணர்களை இந்தியாவிற்கு அனுப்பியிருப்பதாக கூறிய டெட்ரோஸ், பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் வாங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

சர்வதேச அளவில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து 9வது வாரமாக உயர்ந்திருப்பது தங்கள் பணியை சவால் மிக்கதாக ஆக்கி இருப்பதாகவும் சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியா சந்திக்கும் பாதிப்புகள் இதயத்தை நொறுக்குகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>