×

திருப்புத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு-போலீசாரை பார்த்ததும் கலைந்த வீரர்கள்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே மகிபாலன்பட்டி பகுதியில் நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்புத்தூர் அருகே பூங்குன்றநாடு என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் ஆண்டுதோறும் பூங்குன்றநாயகி அம்மனுக்கு சித்திரை மாதம் பூத்திருவிழா நடைபெறும்.

இத்திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கிராமத்தினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தவில்லை.இந்நிலையில், பூங்குன்றநாயகி அம்மன் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு பால், திருமஞ்சனம், சந்தனம் குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்துள்ளது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இந்நிலையில், மகிபாலன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை அலங்கரித்து துண்டு, மாலை கட்டி கோவில்பட்டி பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் காலை சுமார் 10 மணியளவில் கோவில்பட்டி வயல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான காளையும் அதன் உரிமையாளர்கள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர். இதில் மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் மஞ்சுவிரட்டு காளைகளை பிடித்தனர்.

இதில் சிலருக்கு லேசான சிறாய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மஞ்சுவிரட்டு நடப்பது குறித்து தகவல் அறிந்த போலீசார் கோவில்பட்டி வயல் பகுதிக்கு வந்தனர். போலீசாரை பார்த்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என அங்கு கூடியிருந்த கூட்டம் கலைந்து சென்றனர்.

Tags : Tiruputhur , Tiruputhur: A manchurian incident took place in the Magibalanpatti area near Tiruputhur yesterday without permission.
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது