×

வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை மே-15 தேதி வரை ரத்து

ஆஸ்திரேலியா: மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.  இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வரும்  நேரடி பயணிகள் விமானங்களுக்கு வரும் மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் உள்ள  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் 21 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 21 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து செல்லும் 42 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


Tags : India ,Australia , India, Australia, Airlines, Cancellation
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!