சூறாவளியாக சுழன்று அடிக்கும்...இந்தியாவுக்கு சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அரசு அறிவிப்பு

பிரான்ஸ்: இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை கடந்த சில வாரங்களாக சூறாவளியாக சுழன்றடித்து வருகிறது. இந்த கொடூர தொற்றுக்கு எதிரான மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என சிகிச்சைக்கான உபகரணங்கள் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், மக்களை மீட்க வழி தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

 நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

இதனால் மக்களின் பாடு பெரும் திண்டாட்டமாகி வருகிறது. எனவே கொரோனாவால் இந்தியா சந்தித்து வரும் பயங்கர சூழலை எதிர்கொள்வதற்கு பல உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

இந்த வகையில் பிரான்ஸ் அரசு தற்போது இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்சிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்கள் வழங்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு வேவையான திரவ ஆக்சிஜன் வழங்கப்படும் என கூறியுள்ளது.

Related Stories:

>