×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 385 காசாக குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 100 காசுகள் குறைந்துள்ள நிலையில், நேற்று முட்டை விலை 385 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டை விலையில் 30 காசுகள் குறைத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை 385 காசாக நிர்ணயம் செய்துள்ளார். இரவு நேர ஊரடங்கால் ஓட்டல்கள் மூடல், இதனால் முட்டை விற்பனை பாதிப்பு, பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், ‘‘முட்டையின் உற்பத்தி செலவைவிட, விற்பனை விலை குறைவாக இருப்பதால், பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது,’’ என்றார்.  என்இசிசி விலை 385 காசாக இருந்தாலும், பண்ணைகளில் வியாபாரிகள் 350 காசுக்குதான் வாங்கிச் செல்கின்றனர்.

Tags : Namakkal , In the Namakkal region, egg prices fell to 385 kas
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...