பார்சிலோனா ஓபன் 12வது முறையாக நடால் சாம்பியன்

ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சைபாசுடன் (22 வயது, 5வது ரேங்க்) மோதிய நடால் (34 வயது, 2வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சிட்சிபாஸ் 7-6 (8-6) என்ற கணக்கில் டை பிரேக்கரில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. அந்த செட்டில் 5-4 என முன்னிலை வக்த்த நடால், 2 முறை சாம்பியன்ஷிப் பாயின்ட் வாய்ப்பு கிடைத்தும் அவற்றை வீணடித்தார். இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் சிட்சிபாஸ் சாம்பியன்ஷிப் பாயின்ட் வரை சென்ற நிலையில் கடுமையாகப் போராடி மீண்ட நடால் 6-4, 6-7 (6-8), 7-5 என்ற கணக்கில் வென்று 12வது முறையாக பார்சிலோனா ஓபனில் கோப்பையை முத்தமிட்டு அசத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 38 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>