உலக கோப்பை வில்வித்தை 3 தங்கம் வென்ற தீபிகா - தாஸ் தம்பதி!

கவுதமாலாவில் நடந்த உலக கோப்பை வில்வித்தை (முதல் கட்டம்) தொடரில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி மகளிர் ரீகர்வ் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், குழு பிரிவிலும் அங்கிதா பகத், கமோலிகா பாரியுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தீபிகாவின் கணவர் அடானு தாஸ் ஆண்கள் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் கலப்பு குழு பிரிவில் அங்கிதா பகத்துடன் இணைந்து வெண்கலப் பதக்கமும் வென்றார். உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா 3 தங்கம், 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Related Stories:

>