புதிய கட்டுப்பாடு அமல் எதிரொலி: 6 உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்

சென்னை: சென்னையில் இருந்து செல்லும் அந்தமான் உள்ளிட்ட 6  உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் நேற்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இதுவரை வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளி மாநில பயணிகளுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை. ஆனால் நேற்று முதல் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையம் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் உள்ள பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதுவும் குறிப்பாக, சென்னையில் இருந்து அந்தமான், புவனேஸ்வர் (ஒடிசா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூர்), பேக்டோக்ரா (மேற்குவங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய 6 உள்நாட்டு விமானங்களில் செல்பவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்தால்தான், விமான நிலைய கவுன்டர்களில் பயணிக்கு போர்டிங் பாஸ் கொடுக்கப்படும். சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளின் பயணம் ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். அந்த பயணிகள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, நெகடிவ்வ் சான்றிதழுடன் வந்து மீண்டும் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி விமானங்களில் இந்த நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

Related Stories:

>