திருப்போரூரில் முருகன் கோயிலுக்கு வெளியே நடந்த திருமணங்கள்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நேற்று ஊரடங்கை முன்னிட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் அங்கு திருமணத்தை நடத்த வந்தவர்கள், கோயிலுக்கு வெளியே மற்றும் 16 கால் மண்டபத்தில் திருமணத்தை நடத்தினர். பின்னர் அங்ேகயே மணமக்கள் தாலி கட்டி திருமணம் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சன்னதி தெரு முழுவதும் சமூக இடைவெளி காற்றில் பறந்து, மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இந்நிலையில், அங்குள்ள திருமண மண்டபங்களில் இன்று திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தவர்கள், நேற்றிரவு வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இன்று காலை சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களுடன் திருமணங்கள் நடைபெற்றன. மேலும், கேளம்பாக்கம்-வண்டலூர் சந்திப்பு, ஏகாட்டூர் சுங்கச்சாவடி, இள்ளலூர் சந்திப்பு, திருப்போரூர் ரவுண்டானா ஆகிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி மருத்துவம், திருமணம் போன்ற முக்கிய காரணங்களுடன் வந்திருந்தவர்களை மட்டுமே திருப்போரூர் பகுதிக்குள் அனுமதித்தனர்.

Related Stories:

>