ஆக்சிஜன் கிடைக்காமல் இந்திய மக்கள் விலங்குகளை போல் மடிகின்றனர் : சர்வதேச பிரபலங்கள் வேதனை!!

டெல்லி : இந்தியாவில் தற்போது உள்ள திகிலூட்டும் சூழ்நிலை போன்று உலகில் வேறு எங்கும் கண்டதில்லை என்று பிபிசி செய்தி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பொறுப்பாசிரியர் நிக்கோலா கரீம் ட்விட்டரில் கூறியுள்ளார். டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்கள் குறித்து பிபிசி செய்தி தொகுப்பை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரில் ஏற்பட்டுள்ள பரிதாபமான சூழலை தம்மால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ள நிக்கோலா, ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் விலங்குகளை போல் மடிந்து கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உதவுவதற்காக பிரிட்டன் அரசு உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை அனுப்பியுள்ளதாக கூறி உள்ளார். இந்தியாவுடன் ஒன்றாக நின்று போரில் வெல்வோம் என்று அலெக்ஸ் அதில் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ரூ. 37 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். பிரதமரின் பி.எம்.கேர்ஸுக்கு 50,000 அமெரிக்க டாலர்களை ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக கம்மின்ஸ் வழங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இப்பொது ஐபிஎல் தேவையா என்று கேட்கிறார்கள். ஆனால் ஊரடங்கால் வீட்டில் இருப்பவர்களுக்கு இது சிறு மகிழ்வை தரும்,என்றார்.

Related Stories:

>