×

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்க நோய் தடுப்பு மையம் பரிந்துரை

கலிஃபோர்னியா: கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்க நோய் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 3.28 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.53 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 68.58 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்ததில் கருக்கலைப்பு, குறை பிரசவம் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதோ அதே பக்கவிளைவுகள் தான் அப்பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 39% மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்றும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் தான் கொரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

Tags : U.S. Centers for Disease Control , corona
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...