×

அகமதாபாத்தில் இன்று பஞ்சாப்-கேகேஆர் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னையில் நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன. இன்று முதல் அகமதாபாத் மற்றும் டெல்லியில் போட்டிகளில் நடக்கிறது. அகமதாபாத் மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 21வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


பஞ்சாப் 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில், 5வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்திய உற்சாகத்தில் புதுமைதானத்தில் களம் காண்கிறது. மறுபுறம் கொல்கத்தா 5 போட்டியில் 4ல் தோல்வி கண்டுள்ளது. பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கொல்கத்தா இன்று வெற்றி பெற்று முன்னேற வேண்டிய நெருக்கடியில் ஆடும். இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 9ல் பஞ்சாப், 18ல் கொல்கத்தா வென்றுள்ளன.



Tags : Punjab ,KKR ,Ahmedabad , Punjab-KKR clash today in Ahmedabad
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து