×

ஆல்ரவுண்டராக இருப்பது கடினமான வேலை: ஜடேஜா பேட்டி

மும்பை:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில்நேற்று மாலை நடந்த 19வது  லீக் போட்டியில் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ்அணியை 69 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. சென்னை ஆல்ரவுண்டர் ஜடேஜா, ஹர்ஷல் பட்டேல்  வீசிய கடைசி ஓவரில், 5 சிக்சரும், ஒரு பவுண்டரி உள்பட 37 ரன் விளாசினார். பவுலிங்கிலும் 4 ஓவரில் 13 ரன்களே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறியதாவது: எனது உடற்பயிற்சி, திறமை, எல்லாவற்றிலும் நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதிர்ஷ்டவசமாக அது பலனளித்தது. ஆல்ரவுண்டராக இருப்பது கடினமான வேலை, நீங்கள் எல்லா துறைகளையும் செய்ய வேண்டும், பயிற்சியின்போது, ​​மூன்று விஷயங்களையும் (பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சி) ஒரே நாளில் நான் செய்யவில்லை. ஒரு நாள் பேட்டிங், பவுலிங், ஒருநாள் பீல்டிங், உடற்பயிற்சி ஒரு நாள். கடைசி ஓவரில் நான் கடுமையாக அடிக்க விரும்பினேன், மஹி பாய்(டோனி) என்னிடம் ஹர்ஷல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே எங்காவது பந்துவீசுவார் என்று சொன்னார், அதற்கு நான் தயாராக இருந்தேன். இன்று ஒரு கேட்ச்சும் பிடிக்காததால் எனது நாள் அல்ல. ஆனால் எனக்கு ஒரு ரன்அவுட் கிடைத்தது. அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.

Tags : Jadeja , Being an all-rounder is hard work: Jadeja interview
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு