×

நீதிபதி சந்தான கவுடருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் அனைத்தும் நாளைக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி:உடல்நலகக் குறைவால் மறைந்த மூத்த நீதிபதி சந்தானகவுடருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வு வழக்கு விசாரணைகளும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டுவந்த நீதிபதி மோகன் சந்தான கவுண்டர் கடந்த 24ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று  காலை 10.30மணிக்கு தொடங்கவிருந்த நீதிமன்ற அலுவல்கள் அனைத்தும் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 48வது புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட என்.வி.ரமணா உள்ளிட்ட மூத்த நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.  இதன் பிறகு மறைந்த நீதிபதி சந்தான கவுடருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று( விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நாளைக்கு ஒத்திவைக்கப்படும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதேப்போன்று மறைந்த சந்தான கவுடர் நீதிபதியாக பணியாற்றிய கர்நாடக உயர் நீதிமன்றமும் நேற்றை அலுவல்கள் வேலை மற்றும் வழக்கு விசாரணைகள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Supreme Court ,Judge ,Santhanam Gowder , வழக்குகள்
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...