2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார். ஆஸ்கார் வெல்லும் முதல் சீனா பெண்மணி மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கார் வெல்லும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றார்
* சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார்
* சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் டேனியல் கலுயா வென்றார்
* சிறந்த திரைக்கதை - எமரால்ட் ஃ பென்னல்
* சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - செர்ஜியோ லோபஸ் (மியா நியல்-ஜாமிகா வில்சன்
* சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது “சோல்” படம் வென்றது
* சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
* லைவ் ஆக்ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்
* முழுநீள அனிமேஷன் படம் - சோல்
* சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல்
*சிறந்த தழுவல் திரைக்கதை - ஃபாதர்
*சிறந்த ஆடை வடிவமைப்பு - ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)
*சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)