×

கேரள மருத்துவமனையில் கொரோனா வார்டில் வாலிபருக்கு திருமணம்: கவச உடையில் மணமகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே உள்ள பள்ளாதுருத்தி பகுதியை சேர்ந்தவர் சசிதரன் மகன் சரத். கத்தார் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் அருகில் உள்ள தெற்கனார்யாடு பகுதியை சேர்ந்த சுஜித் மகள் அபிராமிக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. சரத்துக்கு விடுமுறை கிடைக்காததால் கடந்த வருடம் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்த முடியவில்லை. இந்த வருடம் மார்ச்சில் தான் சரத்துக்கு விடுமுறை கிடைத்தது. இதையடுத்து, நேற்று அவருக்கு ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் சரத்துக்கும், அவரது தாய் ஜிஜிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இருவரும் ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே, ஊரடங்கால் ஒருமுறை திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் இந்த முறை திருமணத்தை நிச்சயித்த நாளிலேயே நடத்த திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு ெசய்தனர்.

ெகாரோனா வார்டில் மணமகன் இருந்ததால் திருமணம் நடத்த அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். அதற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து, மருத்துவமனைக்கு மணப்பெண் அபிராமி ேநற்று பாதுகாப்பு கவச உடையுடன் வந்தார். அவருடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சரத்தும் அவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். வார்டில் இருந்த மற்றவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

Tags : Corona Ward, ,Kerala ,Hospital , Corona Ward at Kerala Hospital Marriage to a teenager: Armed bride
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...