நாடு முழுவதும் கோவாக்சின் 3வது கட்ட சோதனை இன்று தொடக்கம்

சென்னை: நாடு முழுவதும் உள்ள 8 மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை இன்று தொடங்குகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பூசி ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை ஆரம்பத்தில் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம் உள்பட 12 ஆய்வு மையங்களில் தன்னார்வலர்களுக்கு 2 கட்டமாக செலுத்தி பரிசோதித்தனர். இதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது 3வது கட்டமாக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்க பாரத் பயோடெக் நிறுவனம் மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கனவே தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்திக் கொண்ட 190 பேர்களை வரவழைத்து மீண்டும் 3-வது கட்டமாக கோவாக்சின் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு பரிசோதிக்க உள்ளனர். இதற்காக சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் இதற்கான பரிசோதனை இன்று தொடங்குகிறது.

Related Stories:

More
>