×

இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்றுக்கு 258 போலீசார் பாதிப்பு: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் கொரோனாவின் 2வது அலையில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா முழு ஊரடங்கையடுத்து சென்னை மாநகரில் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:

முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில்7 ஆயிரம் போலீசார் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து பணிகளில் ஈடுபட்டனர். முன்களப்பணியாளர்களாக செயல்பட்டு வரும் மாநகர காவல் துறையில் இதுவரை 3,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 258 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினற்னர். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை சேர்த்து மாநகர காவல் துறையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 13 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் கொரோனா அலையில் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4 போலீசாரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர காவல் துறையில் 23ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அதில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மாநகர போலீசாருக்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு மக்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Police Commissioner ,Maheshkumar Agarwal , Due to the second wave For corona infection 258 Police Vulnerability: Information by Police Commissioner Maheshkumar Agarwal
× RELATED குழந்தைகள் கடத்தலா? போலி வீடியோ...