×

சென்னையில் மட்டும் இதுவரை 3,609 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு: 13 பேர் உயிரிழப்பு..! காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பேட்டி

சென்னை: சென்னையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பேட்டியளித்தார். சென்னையில் கொரோனாவால் இதுவரை 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என கூறினார். 16 ஆயிரம் போலீசாருக்கு முதல் சுற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை பெருநகரில், காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து, அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆர்ச் பகுதியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:- சென்னையில் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

200 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். செனையில் இதுவரை 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் மட்டும் இதுவரை, 3 ஆயிரத்து 609 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 258 பேர் மட்டும் சிகிச்சையில் இருக்கின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். காவாலர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Magesh Agarwal , In Chennai alone, 3,609 policemen have been affected by corona infection so far: 13 people have died ..! Interview with Police Commissioner Mahesh Agarwal
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...