×

குடியாத்தம் அருகே மாந்தோப்பில் 3 யானைகள் அட்டகாசம்: வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே மாந்தோப்பில் 3 யானைகள் அட்டகாசம் செய்து மாமரக்கிளைகளை முறித்து சேதப்படுத்தியது. இதனை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். குடியாத்தம் வனச்சரகம் தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது, தமிழகத்தின் மிகப்பெரிய வனச்சரகம் குடியாத்தம் வனச்சரகம் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான்,  உள்ளிட்டவை  உள்ளது. மேலும் ஆந்திர வனச்சரகத்தில் யானைகள் சரணாலயம் உள்ளது அவ்வப்போது அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமத்திற்கு நுழைய முயற்சிப்பது வழக்கம். அப்போது ஆந்திர யானைகளுக்கும் தமிழக யானைகளும் முட்டி மோதி பிளிறி சத்தமிடும்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 23 யானைகள் ஆந்திர வனச்சரக  சரணாலயத்தில் இருந்து வெளியேறி குடியாத்தம் வனத்துக்குள் வந்து விட்டது. இங்கு தற்போது தமிழக- ஆந்திர யானைகள் முட்டி மோதி சண்டையிட்டு வருகிறது. இதனை குடியாத்தம் வனத்துறையினர் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு  3 யானைகள் குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, ஆம்பூரான்பட்டி ஆகிய கிராமங்களில்  மாந்தோப்புக்குள் புகுந்து   மாமரக் கிளைகளை முறித்து துவம்சம் செய்தது. அப்போது ரோந்து பணியிலிருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து, யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் எந்த நேரத்திலும் யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கடும் பீதியில் உள்ளனர்.

Tags : Elephants Atacam ,Mantob , Gudiyatham, Manthop, 3 elephants, Attakasam
× RELATED காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி...