×

இலுப்பூர் பகுதியில் கோடை காலத்தில் கிணற்றுபாசன நீரால் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்..!

இலுப்பூர்: இலுப்பூர் பகுதியில் கோடை காலத்தில் விவசாயிகள் கிணற்று பாசன நீரைக்கொண்டு தோட்ட பயிர்களான காய் கறிகளை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். தோட்டப் பயிர்களில் லாபம் பெற விவசாயிகளுக்கு தரமான விதை, செடிகளை நோய் தாக்கும் போது சரியான மருத்து போன்ற தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலுப்பூர் பகுதியில் பருவ மழை பெய்யும் காலங்களில் விவசாயிகள் வயல்களில் நெல்,கடலை, கம்பு. பருத்தி, கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டாலும் பெரும்பாலான விவசாயிகள் நெல்களையே பயிர் செய்து வந்துள்ளனர். மானாவாரி நிலங்களில் சோளம், கேழ்வரத, மற்றும் பயறுவகைகளை பயிரிட்டு வருகின்றனர். கோடை காலத்தில் விவசாயிகள் கிணற்று பாசன நீரைக்கொண்டு விவசாயிகள் தோட்ட பயிர்களான காய் கறிகளை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.

தற்பொழுது விவசாயிகள் காய் கறி பயிர்களான வெங்காயம், வெண்டை, புடலை, பீர்க்கன்.கத்திரி போனறவைகளை பயிரிட துவங்கியுள்ளனர். இதில் ஒரு சில விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்காததாலும் ஒரு விதமான பூச்சிகள் தாக்கியதால் மருந்துகள் தெளித்தும் நோயை கட்டுப்படுத்த மகசூல் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து இலுப்பூர்- மணப்பாறை சாலையில் எருதுப்பட்டி பகுதியில் பீர்க்கன் பயிர் செய்த விவசாயி கூறுகையில், பொதுவாக பருவமழை காலங்களில் நெல்களையே பிரதான பயிர்களாக பயிர் செய்யும் நாங்கள் கோடை பருவத்தில் கிணற்றில் உள்ள நீரைக்கொண்டு தற்பொழுது பருத்தி. வெண்டை மற்றும் பீர்க்கன் காயை பயிரிட்டுள்ளேன். எங்களுக்கு அதிக மகசூல் தரும் காய்கறிகளின் விதைகள் கிடைப்பதில்லை. விதை கடைகளில் விதைகளை வாங்கி பயிர் செய்தோம் எங்களுக்கு லாபம் தர கூடிய வகையில் காய்கள் கிடைக்க வில்லை.

இதிலும் நோய் தாக்கம் வேறு இதனால் மகசூல் குறைந்துள்ளது. உரக்கடைகளில் சென்று அவர்கள் கூறும் மருந்துகளை தெளித்து வருகிறோம். ஆனால் செடியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சென்ற வருடம் அரை ஏக்கரில் பீர்க்கன் காய் பயிர் செய்திருந்தேன் ஒருவிதமான வைரஸ் நோயின் தாக்கம் ஏற்பட்டு அரை ஏக்காில் பயிர் செய்திருந்த பீர்க்கன் செடி அனைத்தையும் பிடுங்கி எறிந்து விட்டேன். தற்பொழுது மீண்டும் பீர்க்கன் பயிர் செய்துள்ளேன் என்றார். கோடை காலத்தில் கிணற்றில் உள்ள நீரைக்கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் லாபம் பெற விவசாயிகளுக்கு தரமாக விதை, செடிகளை நோய் தாக்கும் போது சாியான மருந்து போன்ற தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Iluppur , Farmers intensify vegetable cultivation with well irrigated water during summer in Iluppur area ..!
× RELATED இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக...