பிளாஸ்மா தானம்... சச்சின் உற்சாகம்

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சச்சின் முழுவதுமாக குணமாகி வீடு திரும்பிய நிலையில், பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. கொரொனா பாசிட்டிவ் ஆனதால் 21 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த இக்கட்டான சூழலில் நீங்கள், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பிரார்த்தனையும், நல் வாழ்த்துக்களும் தான் மனரீதியாக நான் உறுதியுடன் இருக்கவும் நோயின் தாக்கத்தில் இருந்து மீளவும் உதவின. அனைவருக்கும் நன்றி. டாக்டர்களுடன் ஆலோசித்து, அவர்கள் அனுமதித்தால் பிளாஸ்மா தானம் செய்யலாம் என முடிவு செய்துள்ளேன். சரியான சமயத்தில் செய்யும் இந்த உதவியால் பல நோயாளிகளின் உயிரை காக்க முடியும் என்பதால், நீங்களும் முடிந்த வரை ரத்த தானம் செய்து சக இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என சச்சின் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Related Stories: