வசந்த உற்சவத்தை முன்னிட்டு மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை சுப்ரபாத சேவையுடன்  சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு கோயிலில் கல்யாண மண்டபத்தில் ஜீயர்கள் முன்னிலையில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து, இன்றும் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 3வது நாளான 26ம் தேதி  தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், சீதா லக்ஷ்மண சமேத கோதண்டராமஸ்வாமி ஆஞ்சநேயர், ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் கோயில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் இந்த உற்சவம் நடைபெறும்.இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோயிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் நடத்தப்பட்டது.

Related Stories:

>