×

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை: கமல் பேச்சு

சென்னை: உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற தலைப்பில், 28வது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் நீதி மய்யம் இணையதளம் மூலம் கருத்தரங்கம் நடத்தியது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: ஜனநாயகம் என்பது மோனாலித்திக் கட்டுமானம் அல்ல. ஒருமுறை உருவாக்கிவிட்டால் போதும், அப்படியே இருக்கும் என்று நினைக்கக்கூடாது. தொடர்ச்சியாக  கண்காணித்தால்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். நமது ஜனநாயகத்தை நாம்தான் கண்காணிக்க வேண்டும்.

கிராம சபைகளை போலவே நகர சபை, வார்டு சபைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒடிசாவில் நடைமுறையில் இருக்கும் ‘ஸ்லம் சபா’ ஒரு சிறப்பான செயல்முறை. குடிசைப்பகுதிகள் நிறைந்த தமிழகத்திலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், மக்கள் நலன் என்ற விஷயத்தில் மநீம தீவிரமாக செயல்படும். இன்னும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக, 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதை நடத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Election Commission ,Kamal , It is the duty of the Election Commission to conduct local elections: Kamal speech
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...