×

உரிமை குழு உறுப்பினராக திமுக எம்பி பி.வில்சன் நியமனம்

சென்னை: மாநிலங்களையில் உள்ள உரிமைக் குழுவுக்கு 10 பேர் அடங்கிய பட்டியலை மாநிலங்களவை இணை செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி அறிவித்துள்ளார். அதில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள உரிமைக் குழுவில் ஹரிவான்ஸ், அனில் ஜெயின், குமார் கேதார், சுஜித் குமார், நரசிம்ம ராவ், அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் சின்ஹா, சுதன்சு திரிவேதி, பி.வில்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வக்கீலுமான பி.வில்சன் உரிமைக் குழு உறுப்பினாராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்பிக்கள், மூத்த வக்கீல்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Wilson , Rights Committee, DMK MP, P. Wilson
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’