திடீர் உடல்நலக்குறைவு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கியிருந்தார். நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் வெளியாகவில்லை. பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டார். தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தார். தேர்தல் முடிந்தவுடன் சென்னை திரும்பினார்.

Related Stories:

>