கொல்கத்தா-ராஜஸ்தான் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 18வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் 4 ரன்னில் தோற்ற நிலையில், 2வதுபோட்டியில் டெல்லியை சாய்த்தது. 3வது போட்டியில் சென்னையிடம் 45 ரன் வித்தியாசத்திலும் கடைசி போட்டியில் பெங்களூருவிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லரையே பெரிதும் நம்பி உள்ளது. இவர்கள் நின்றால் தான் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் தடுமாறி வருகிறார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரீஸ் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பந்து வீச்சில் ஆர்ச்சர் விலகிய நிலையில் மற்றவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மறுபுறம் கொல்கத்தா முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் மும்பை, 3வது போட்டியில் பெங்களூரு, கடைசி போட்டியில் சென்னையிடம் போராடி தோற்றது. டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக அமைய வில்லை. கேப்டன் மோர்கனும் குறிப்பிடும் படி ஆடவில்லை. ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீளவேண்டிய நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் 2வது வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.இதில் கொல்கத்தா 12, ராஜஸ்தான் 10 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>