×

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாகும் என்பதற்கு இந்தியாவே சான்று : உலக சுகாதார நிறுவனம் வேதனை

புதுடெல்லி: கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை நினைவுபடுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 3.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், உலகளவில் தினமும் இந்தியா புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாட்டில் கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, லட்சங்களில் உயர்ந்து வருகிறது.மரண ஓலம் காதைக் கிழிக்கிறது.இறந்தால் கூட நிம்மதியாக புதைக்கவோ, எரிக்கவோ இடுகாடுகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் ஒரே இடத்தில் பல பிணங்களை எரித்த புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பிணங்கள் மீது எரியும் நெருப்பால் இந்தியா ஒளிர்கிறது என பலரும் விமர்சித்திருந்தனர்.

இச்சூழலில் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இந்தியாவை மோசமாக முன்னுதாரணமாகப் பேசியிருக்கிறார். ஒரு வைரஸ் எப்பேர்பட்ட பேரழிவை உருவாக்கும் என்பதற்கு இந்தியா தான் சான்று என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் உலக அரங்கில் இந்தியாவை தலைகுணிய வைத்துவிட்டதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

Tags : India ,World Health Organization , உலக சுகாதார நிறுவனம்
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!