திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் புதர் மண்டிக் கிடக்கும் நகராட்சி சிறுவர் பூங்கா-சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா?

திருவாரூர் : திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் நகராட்சியின் சிறுவர் பூங்காவினை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் நகரில் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் இருந்து வருகின்றன. இதுமட்டுமின்றி புதிதாக நகரம் அமைக்கப்படும்போது பூங்காவிற்கு என இடம் ஒதுக்கப்பட்டு அது போன்ற இடங்களும் பூங்காக்கள் அமைக்கப்படாமல் குப்பை மேடுகளாக இருந்து வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி 8வது வார்டு கொடிக்கால்பாளையத்தில் காயிதேமில்லத் சிறுவர் பூங்கா கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

நகராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த சிறுவர் பூங்காவானது தற்போது எவ்வித பராமரிப்புமின்றி முட்புதர்களாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அந்த பூங்காவினை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் நகராட்சி சார்பில் உடனடியாக இந்த பூங்காவினை சீரமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>