×

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி விலகுக :ப.சிதம்பரம்!!

சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பரவல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு எச்சரிக்கை செய்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாடாளுமன்றக்குழு அறிவுரைகளை கூறி இருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நேற்று வரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மத்திய அரசின் இந்த செயல் கடுமையான அலட்சியம் அல்லவா, இத்தகைய மெத்தன போக்கிற்கு யாரேனும் பொறுப்பேற்க மாட்டார்களா, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் ஆகியவர்களை பதவி விலகும்படி கேட்க வேண்டுமா ?என்றும் ப. சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்படி அவர்களது உறவினர்கள், மருத்துவர்களிடம் மன்றாடுகின்றனர்.மக்கள் தங்கள் முதுகுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்தபடியே நோயாளிகளை அழைத்து வருகிறார்கள். ஆக்சிஜன் விநியோகிக்க வலியுறுத்தி மருத்துவமனை நிர்வாகங்கள் நீதிமன்றங்களை நோக்கி ஓடுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அவர் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். 


Tags : Union Minister ,Harshwardhan ,Corona ,P. Chidambaram , சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...