×

அமெரிக்காவில் ரத்தம் உறைதல் புகாரால் நிறுத்தப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு

சென்னை : ரத்தம் உறைதல் புகார் எதிரொலியாக அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று அந்நாட்டு நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில், ஒரு முறை மட்டுமே போடப்பட கூடிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை கண்டறியப்பட்டது.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டினை நிறுத்தி வைத்த அமெரிக்க அரசு, மருந்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த எப்டிஏ, சிடிசிபி ஆகிய அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. இதனிடையே ஜான்சன் அண்ட் ஜானசன் தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக அதனை ஆய்வு செய்த சிடிசிபி எனப்படும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை அமெரிக்காவில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டை மீண்டும் தொடங்க ஜோபிடன் அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


Tags : Johnson & Johnson ,United States , ஜான்சன் அண்ட் ஜான்சன்
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து