×

காளான் அவல் கட்லெட்

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
அவல் – 1/2 கப்
பச்சை பீன்ஸ் – 6 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கையளவு
பிரட் தூள் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் அவலை நீரில் ஒருமுறை கழுவி விட்டு, பின் நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, நீரை முழுவதுமாக வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு வதக்கி கலவையானது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அத்துடன் நறுக்கிய காளான், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மாங்காய் தூள், அவல் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கையால் பிசைய வேண்டும். அடுத்து சிறிது அவல் கலவையை எடுத்து உருட்டி, அதை தட்டையாக கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து கலவையையும் தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள ஒரு கட்லெட்டை எடுத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் கட்லெட்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான காளான் அவல் கட்லெட் தயார்.

The post காளான் அவல் கட்லெட் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நுங்கு ஜூஸ்