மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : மத்திய அரசு அதிரடி!!

டெல்லி : மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

தடுப்பூசிக்கான தேவை அதிகரித்திருப்பதை பயன்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தியது. ரூ.250க்கு விற்கப்பட்டு வந்த தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுமென சீரம் நிறுவனம் அறிவித்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மாநில அரசுகள், தடுப்பூசி விலையேற்றத்தால் அதிருப்தி அடைந்தன. தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>