தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் தமிழகம் சார்பில் பங்கேற்ற தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பின் போது கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது, ஆக்சிஜன் விநியோகத்தை கூட்டுவது, தேவையான இடங்களில் சுகாதார பணியாளர்களை பணியமர்த்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும் அதுகுறித்து இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>