ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி : 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்தது தெற்கு ரயில்வே

சென்னை : தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதையொட்டி, நாளையும், மே 2ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை - புதுச்சேரி, திருச்சி - கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழுமுடக்க நாளான நாளை ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>